சிறப்புடைய இடுகை

புதன், 16 மே, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?



ஆமாம்யா எனக்கு ரெண்டு பொண்டாட்டிங்க உனக்கென்ன நான்தானே கட்டிகிட்டேன், நானே பாத்துக்கிறேன் நீ சும்மாயிருன்னு ரொம்ப சுலபமா சர்ச்சைகளை ஒதுக்கியவர். கேள்வி பதில்களும், நாவலின் முன்னுரையுமே புத்தகத்தினை வாங்கிய பணத்துக்கு ஈடாக்குமளவிற்கு எழுதியவர்.


இவரோட திறமைக்கு இவருக்கு கிடைத்த விருதுகள் குறைவென்பது எனது கருத்து. பாவம் அரசியல் பண்ண தெரியாம, காக்கா புடிக்கலேன்னா அதெல்லாம் கிடைக்காதுன்னு தெரியலேன்னு நினைக்கிறேன். இல்லேன்னா உங்க விருதெல்லாம் எனக்கு முக்கியமில்லை, வாசகர்கிட்டே கிடைச்ச "எழுத்து சித்தர்" ன்ன விருதே போதும்ன்னு இருந்திருக்கலாம்.

90களில்  கிடைக்கிற எல்லா புக்கையும் படிச்சிட்டிருக்கிறப்ப இவரோட எழுத்துக்கள் பழக்கமாகின. ஏதோ ஒண்ணு வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சி படிக்க ஆரம்பிச்சது ஏறக்குறைய இவரோட 120 நாவல்கள் வரை 2005 வரை இந்தியாவில் இருந்தவரைக்கும் தேடி தேடி வாங்கி படிச்சி, இப்பவும் அதெயெல்லாம் பத்திரமா வச்சிருக்கேன். குறிப்பா நான்காம் பிறை ன்னு ஒரு நாவல் படிச்சதுக்கப்புறம்தான் வெளிநாட்டில வேலைக்கு போணும்ங்கிற எண்ணம் அதிகமாச்சு. அந்த நாவலின் ஹீரோ கதாபாத்திரமும் எனதும் சற்றேறக்குறைய ஒண்ணா இருந்தது எனக்கு பெரிய உந்துதலா இருந்தது.


உண்மையை சொல்லணும்னா பதின்ம வயசில இவரோட காமம் கலந்த எழுத்துக்கள் மேல ஒரு கிறக்கம் இருந்தாலும் போக போக பெண்களை பற்றிய தெளிவான கருத்துக்களும், ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசிக்கிற கோணங்களும் ஒரு மாதிரி வித்தியாசமா யோசிக்க வச்சிது. யாரோ சமீபத்துல கூட சொன்ன மாதிரி பாலகுமாரனோட புத்தகம் படிச்சாலே நமக்கு ஒரு திமிர் வரும் பாருங்க, அப்பப்பா அது ஓவர் தனி சுகம். எப்படி ஜிம்முக்கு போறவன் ரெண்டு கையையும் அகட்டி வச்சிக்கிட்டு கர்வமா நடப்பானோ அப்படி ஒரு தோணல். நான் ரெண்டையும் அனுபவிச்சிருக்கேன். இதுல இன்னொரு கர்வம் என்னன்னா வெளியில பாலகுமாரனோட புக்கை படிச்சவன்னு காமிச்சிக்கிறதுல ஒரு தனி பெருமிதம். அத்தனைக்கும் நம்மை தகுதியாக்கியவர்.

எனக்கு தெரிஞ்சு  எழுத்தாளனோட வருமானத்தை பத்தி பகிரங்கமா இவர்தான் பேச ஆரம்பிச்சார், அதோட இவரோட எழுத்துக்களை திருடினவங்களையும் மிக மோசமா ஏன்டா இப்படி பண்ணிட்டமோன்னு கூச வக்கிர அளவுக்கு செம்ம காட்டு காட்டியிருக்கார், ஒரு வகையில அதுவும் கூட ஒரு திமிர்தானோன்னு தோணும்.

தியானத்தை பத்தியும், மூச்சு பயிற்சி பத்தியும்  இவரோட புரிதல்களும், அதை மற்றவர்களுக்கும் புரிய வைக்க முயற்சித்ததற்கும் ரொம்ப மெனக்கெட்டவர். ஏதோ நான் கத்துக்கிட்டேன், என்னோட போகட்டும்ன்னு இருக்காம இவரோட எழுத்த விரும்பினவங்களுக்கும் அவங்களுக்கு புரியிற மாதிரி சொல்லி கொடுத்திருக்கார். நிறைய இடத்துல எனக்கு பயன்பட்டிருக்கு இவரோட அந்த எழுத்துக்கள்.

ஔவையார், பட்டினத்தார், சேஷாத்திரி ஸ்வாமிகள், அருணகிரி நாதர் ன்னு நிறைய தெரிஞ்ச பெயர்களின் தெரியாத வாழ்க்கை வரலாற்றினை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர்.

திரையுலகத்தில் மிகவும் நேர்த்தியாக தன்னை உள்நிறுத்தி, ஆளுமையை செலுத்தி, முடிந்தவரை திரைபிரபலங்களிடம் ஜால்ரா தட்டாம இருந்துகிட்டே, மெதுவா நகர்ந்துவிட்டார்.




புதிதாக எழுத நினைப்பர்வர்களுக்கு மற்றவர்களின் எழுத்துக்களை படிக்க சொல்லி வலியுறுத்திகிட்டேயிருப்பார்.

உடையார் பற்றி பேசுனாலே கிட்டத்தட்ட சில நாள் பேசிகிட்டியிருக்கலாம், அவ்வளவு உழைப்பு. எனக்கு தெரிஞ்சு சமகாலத்துல இவ்வளவு வருத்திக்கிட்டு எழுதினவங்க ரொம்ப கம்மின்னு நினைக்கிறேன். பொன்னியின் செல்வனை படித்திருந்தாலும் உடையாரின் கோணம் எந்த விதத்திலும் அதனை பிரதிபலிக்காமல் பிரமிக்கவைத்திருப்பார்.



எப்படியோ நல்லா அனுபவிச்சு வாழ்ந்து, கொஞ்சம் நோயோட ரொம்ப சிரமப்படாம போயி சேர்த்துட்டார்.ஒரு எழுத்தாளனா அவர் நினச்சித சாதிச்சிட்டாரான்னாக்க  என்னோட பதில் ஆமான்னுதான் சொல்லுவேன்.

புதன், 18 ஏப்ரல், 2018

என்னம்மா சத்தம் அங்கே?

இதை நான் இங்க வெளிநாட்டுலேயிருந்து எழுதுறப்ப நம்ப ஊருல இருக்கிறவங்களும், என் சொந்த, பந்தங்களை சேத்து எல்லாத்துக்குமே அன்னன்னிக்கு  வாழ்க்கையே ஓட்டுறதே தடுமாட்டமாயிடிச்சி.

என்னதான்யா நடக்குது நம்ம ஊருல ?

ரொம்ப சிறப்பான அரசாங்கம். யாருக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல,பதவி போயிட கூடாது. டயர் நக்கிங்களும், கூழைக்கும்பிடு போடுறவங்களும்  ரொம்ப சிறப்பா இருக்காங்க. எதிர்கட்சியில இருக்கிறவனுங்களால ஒரு பிரயோஜனமும்மில்லை. எல்லாத்துலயும் அரசியல்.





கோடி கோடியா கொள்ள அடிச்ச திமுக முன்னாள் மந்திரியோ, அதிமுக இந்நாள் முன்னாள் மந்திரிங்களோ எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமில்லாம சுத்திட்ருக்கானுங்களே.





காவேரியில தண்ணி வரல, அங்க ஆட்சியில இருக்கிறவன்கிட்டே நம்ப ஊரு காங்கிரஸ்காரண கேளுய்யான்னா  கோர்ட்டில் தீர்ப்பு வரட்டும் அப்புறம் பாருங்க என்ன பண்றமுன்னு வீரத்தை காட்றானுங்க. தீர்ப்பு வந்ததும் என்ன வெங்காயத்துக்கு நீ போயி பேசணும்? சரி மத்தியில இருக்கிற பிஜேபி கிட்ட கேளுங்கன்னு இங்க இருக்கிற பக்தாள்கிட்ட சொன்ன்னா கொஞ்சம் பொறுங்க கர்நாடகவில தேர்தல் முடிஞ்சு நாங்க ஆட்சிக்கு வந்ததும் கிழிச்சிப்புடுறோம்றாங்க. இதெல்லாம் என்னன்னே தெரியாமலேயே நம்பள ஏமாத்திக்கிட்டே இருக்கானுங்க இந்த உயர்திரு அரசியல்வாதிங்க.






அதிலேயும் இந்த மெட்ராஸ் வெள்ளம் சமயத்தில வந்த உதவி பொருளுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டினானுங்களே. அடேடேடேடே என்ன சமயோசிதம். உலகமகா புத்திசாலித்தனம்.





மனுஷன் பொறந்தா ஜாதி, மதம் பிரச்சனை , அதுலேயும் சென்ட்ரல்ல இந்த பிஜேபி வந்ததுக்கு பிறகு குல்லா போட்டவனெல்லாம்  தீவிரவாதி. கிறிஸ்டியன்  எல்லாரும் மதம் மாத்தறவங்க. ஹிந்துவெல்லாம் பசு மாட்ட கும்புட்டு, கோவிலுக்கு போயிட்டு பெண்களை தெய்வமா மதிப்பாங்கன்னு நம்பிக்கை. தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம இளைய தலைமுறையும் இதெல்லாம் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க.



தமிழ்நாட்டுல மெட்ராஸ்ல இருக்கிறவனுக்கு தண்ணிக்கு, நல்ல காத்துக்கு  பிரச்சனை. சரி தூத்துகுடியிலும் மெட்ராஸ்ல இருக்கிற அதே பிரச்சனைன்னா? இந்த கோடியிலயிருந்து அந்த கோடிவரைக்கும் இத்தனை வருஷமா என்னதான்யா பண்ணினாங்க இந்த திராவிட கட்சியெல்லாம் ?

எங்கே போணும்னாலும் டோல் கேட் லொட்டு லொசுக்குன்னு தினமும் கப்பம் கட்டணும், விவசாயம் பண்ண தண்ணி பத்தலை, நிலத்தடி நீர் அதலபாதாளத்துல போயாச்சு. பேயிர மழைதண்ணியெல்லாம் ஒன்னு சாக்கடையில் இல்ல கடல்ல கலக்குது. டெல்டா பக்கத்துல வர்ற காவேரி தண்ணிய சேத்து வாசிக்க அணைய கட்டல, முல்ல பெரியாறு தண்ணி வரும் ஆனா வராது.தாமிரபரணியும், வைகையும் வத்தி போயி ரொம்ப வருஷமாச்சு. இந்த திராவிட கட்சிங்க உபயத்துல எல்லா ஆத்துலேயும் மணலை அள்ளியாச்சு. அப்பறம் கொஞ்ச நஞ்சம் இருக்கிற கனிம வளங்களும் கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்காங்க.

ஆனா என்ன ஆனாலும் டாஸ்மாக் மட்டும் எந்த தண்ணி பஞ்சமும் இல்ல, லோக்கல் சரக்கு, பாரின் சரக்கு, கூலிங் இருக்கிற, இல்லாத பீருன்னு மக்களுக்கு நல்ல சேவை செய்யறாங்க.

அப்படின்னா எல்லா பிரச்சனைக்கும் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. நம்மகிட்டேயும் அசிங்கமான பழக்கம் இருக்கு.

தலைநகரத்துல வெள்ளம், மழைன்னா மத்த எல்லா ஊருலேயிருந்தும் உதவறாங்க. ஆனா மெட்றாஸ்க்காரங்க  விவசாயிங்க போராட்டம், கூடங்குளம் அணுமின் பிரச்சனை, திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சனை, மீத்தேன் - நியூட்ரோனோ பிரச்சனை, கன்னியாகுமரி மீனவர் பிரச்சனை, காவேரி போராட்டம்னு எது நடந்தாலும் இவங்க கண்டுக்கவே மட்டேங்குறாங்களே. இதுலே வெயில் காலத்துல மத்த எல்லா ஊருலேயும் நினச்சா கரண்ட் கட்டு, இவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.

GST, பணமாற்ற சட்டம்ன்னு இங்க அடிப்படை ஆதாரமே ஆட்டங்கன்றுருக்கு. ஆனா இந்த பாழாப்போன பதவிலிருக்கிறவனெல்லாம் நல்ல இருக்கானுங்களே ?

இதுக்கு நடுவுல ரஜினி வேணுமா? கமல் வேணுமா? அஜித் நல்லவரா? இல்ல விஜய் வல்லவரான்னு கருத்துக்கணிப்பு வேற. IT வேலை மட்டும்தான் வேலையா ? அதுக்கு மட்டும்தான் மரியாதையா? என்ன மாதிரி மனநிலைமையில நம்ம இருக்கோம்.

கீழ் நிலையிலே இருக்கிற போலீஸ்காரங்க நம்மள அடிக்கிறாங்க. மேல் நிலையில இருக்கிறவங்க அரசியல்வாதிங்கக்கிட்ட அடி  வாங்குறாங்க. பணம், பதவி இருக்குன்னா நம்ப ஊருலே எல்லாமே கிடைக்கும். இல்லாதவங்க மூடிக்கிட்டு பாத்துக்கிட்டு, பொருமிக்கிட்டே போவேண்டியதுதான்.

கூடிய சீக்கிரம் ஏதாவது நல்லது நடந்தா  நம்ம அடுத்த தலைமுறைக்கு நல்லது, இல்லேன்னா இன்னொரு ஆப்ரிக்க மாதிரி ஆயிடும் நம்ப ஊரும்.