சிறப்புடைய இடுகை

புதன், 18 ஏப்ரல், 2018

என்னம்மா சத்தம் அங்கே?

இதை நான் இங்க வெளிநாட்டுலேயிருந்து எழுதுறப்ப நம்ப ஊருல இருக்கிறவங்களும், என் சொந்த, பந்தங்களை சேத்து எல்லாத்துக்குமே அன்னன்னிக்கு  வாழ்க்கையே ஓட்டுறதே தடுமாட்டமாயிடிச்சி.

என்னதான்யா நடக்குது நம்ம ஊருல ?

ரொம்ப சிறப்பான அரசாங்கம். யாருக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல,பதவி போயிட கூடாது. டயர் நக்கிங்களும், கூழைக்கும்பிடு போடுறவங்களும்  ரொம்ப சிறப்பா இருக்காங்க. எதிர்கட்சியில இருக்கிறவனுங்களால ஒரு பிரயோஜனமும்மில்லை. எல்லாத்துலயும் அரசியல்.





கோடி கோடியா கொள்ள அடிச்ச திமுக முன்னாள் மந்திரியோ, அதிமுக இந்நாள் முன்னாள் மந்திரிங்களோ எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமில்லாம சுத்திட்ருக்கானுங்களே.





காவேரியில தண்ணி வரல, அங்க ஆட்சியில இருக்கிறவன்கிட்டே நம்ப ஊரு காங்கிரஸ்காரண கேளுய்யான்னா  கோர்ட்டில் தீர்ப்பு வரட்டும் அப்புறம் பாருங்க என்ன பண்றமுன்னு வீரத்தை காட்றானுங்க. தீர்ப்பு வந்ததும் என்ன வெங்காயத்துக்கு நீ போயி பேசணும்? சரி மத்தியில இருக்கிற பிஜேபி கிட்ட கேளுங்கன்னு இங்க இருக்கிற பக்தாள்கிட்ட சொன்ன்னா கொஞ்சம் பொறுங்க கர்நாடகவில தேர்தல் முடிஞ்சு நாங்க ஆட்சிக்கு வந்ததும் கிழிச்சிப்புடுறோம்றாங்க. இதெல்லாம் என்னன்னே தெரியாமலேயே நம்பள ஏமாத்திக்கிட்டே இருக்கானுங்க இந்த உயர்திரு அரசியல்வாதிங்க.






அதிலேயும் இந்த மெட்ராஸ் வெள்ளம் சமயத்தில வந்த உதவி பொருளுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டினானுங்களே. அடேடேடேடே என்ன சமயோசிதம். உலகமகா புத்திசாலித்தனம்.





மனுஷன் பொறந்தா ஜாதி, மதம் பிரச்சனை , அதுலேயும் சென்ட்ரல்ல இந்த பிஜேபி வந்ததுக்கு பிறகு குல்லா போட்டவனெல்லாம்  தீவிரவாதி. கிறிஸ்டியன்  எல்லாரும் மதம் மாத்தறவங்க. ஹிந்துவெல்லாம் பசு மாட்ட கும்புட்டு, கோவிலுக்கு போயிட்டு பெண்களை தெய்வமா மதிப்பாங்கன்னு நம்பிக்கை. தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம இளைய தலைமுறையும் இதெல்லாம் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க.



தமிழ்நாட்டுல மெட்ராஸ்ல இருக்கிறவனுக்கு தண்ணிக்கு, நல்ல காத்துக்கு  பிரச்சனை. சரி தூத்துகுடியிலும் மெட்ராஸ்ல இருக்கிற அதே பிரச்சனைன்னா? இந்த கோடியிலயிருந்து அந்த கோடிவரைக்கும் இத்தனை வருஷமா என்னதான்யா பண்ணினாங்க இந்த திராவிட கட்சியெல்லாம் ?

எங்கே போணும்னாலும் டோல் கேட் லொட்டு லொசுக்குன்னு தினமும் கப்பம் கட்டணும், விவசாயம் பண்ண தண்ணி பத்தலை, நிலத்தடி நீர் அதலபாதாளத்துல போயாச்சு. பேயிர மழைதண்ணியெல்லாம் ஒன்னு சாக்கடையில் இல்ல கடல்ல கலக்குது. டெல்டா பக்கத்துல வர்ற காவேரி தண்ணிய சேத்து வாசிக்க அணைய கட்டல, முல்ல பெரியாறு தண்ணி வரும் ஆனா வராது.தாமிரபரணியும், வைகையும் வத்தி போயி ரொம்ப வருஷமாச்சு. இந்த திராவிட கட்சிங்க உபயத்துல எல்லா ஆத்துலேயும் மணலை அள்ளியாச்சு. அப்பறம் கொஞ்ச நஞ்சம் இருக்கிற கனிம வளங்களும் கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்காங்க.

ஆனா என்ன ஆனாலும் டாஸ்மாக் மட்டும் எந்த தண்ணி பஞ்சமும் இல்ல, லோக்கல் சரக்கு, பாரின் சரக்கு, கூலிங் இருக்கிற, இல்லாத பீருன்னு மக்களுக்கு நல்ல சேவை செய்யறாங்க.

அப்படின்னா எல்லா பிரச்சனைக்கும் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. நம்மகிட்டேயும் அசிங்கமான பழக்கம் இருக்கு.

தலைநகரத்துல வெள்ளம், மழைன்னா மத்த எல்லா ஊருலேயிருந்தும் உதவறாங்க. ஆனா மெட்றாஸ்க்காரங்க  விவசாயிங்க போராட்டம், கூடங்குளம் அணுமின் பிரச்சனை, திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சனை, மீத்தேன் - நியூட்ரோனோ பிரச்சனை, கன்னியாகுமரி மீனவர் பிரச்சனை, காவேரி போராட்டம்னு எது நடந்தாலும் இவங்க கண்டுக்கவே மட்டேங்குறாங்களே. இதுலே வெயில் காலத்துல மத்த எல்லா ஊருலேயும் நினச்சா கரண்ட் கட்டு, இவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.

GST, பணமாற்ற சட்டம்ன்னு இங்க அடிப்படை ஆதாரமே ஆட்டங்கன்றுருக்கு. ஆனா இந்த பாழாப்போன பதவிலிருக்கிறவனெல்லாம் நல்ல இருக்கானுங்களே ?

இதுக்கு நடுவுல ரஜினி வேணுமா? கமல் வேணுமா? அஜித் நல்லவரா? இல்ல விஜய் வல்லவரான்னு கருத்துக்கணிப்பு வேற. IT வேலை மட்டும்தான் வேலையா ? அதுக்கு மட்டும்தான் மரியாதையா? என்ன மாதிரி மனநிலைமையில நம்ம இருக்கோம்.

கீழ் நிலையிலே இருக்கிற போலீஸ்காரங்க நம்மள அடிக்கிறாங்க. மேல் நிலையில இருக்கிறவங்க அரசியல்வாதிங்கக்கிட்ட அடி  வாங்குறாங்க. பணம், பதவி இருக்குன்னா நம்ப ஊருலே எல்லாமே கிடைக்கும். இல்லாதவங்க மூடிக்கிட்டு பாத்துக்கிட்டு, பொருமிக்கிட்டே போவேண்டியதுதான்.

கூடிய சீக்கிரம் ஏதாவது நல்லது நடந்தா  நம்ம அடுத்த தலைமுறைக்கு நல்லது, இல்லேன்னா இன்னொரு ஆப்ரிக்க மாதிரி ஆயிடும் நம்ப ஊரும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக